தலைமலை சஞ்சீவி பெருமாள்







போன புரட்டாசி மாதத்தில ஆபீஸ்ல நண்பர்கள் சேந்து தலைமலை போனோம். இந்த மலைய பத்தி தினமணில வந்தது......... தாபேட்டை அருகே உள்ள எருமப்பட்டி ஒன்றியம் செவந்தி ஊராட்சியில் அமைந்துள்ளது தலைமலை என்று வர்ணிக்கப்படும் தலைமலைராயன் கோவில். சுமார் 3 ஆயிரம் அடி உயரத்தில் மூலவர் தலைமலை ராயன் சன்னதியும், உடன் பூதேவி, ஸ்ரீதேவி, நிதேவி உற்சவர் சீனிவாசவரதராஜர் ஆகியோர் அமைந்து இருப்பது சிறப்பம்சமாகும்.
இராமபிரானுக்கும் இராவணணுக்கும் போர் நடந்து கொண்டிருந்த வேலையில் எதிரி படையினர் பயன்படுத்திய அஸ்திரத்திற்கு இராமபிரான் படையினர் மயக்கமுற்று வீழ்ந்தனர் அப்போது அவர்களை காப்பாற்றுவதற்க்காக அனுமன் சஞ்சிவிமலையை தூக்கி வந்ததாக கூறப்படுகிறது. அப்படி அந்த மலையை தூக்கி வந்த போது சிதறுண்டு விழுந்த பகுதியே இத்தலைமலை என்றும், தூரத்தில் இருந்து பார்க்கும் போது கிரீடத்துடன் பெருமாள் மல்லாந்து படுத்து இருப்பது போல் தோற்றம் தருவதாலும் தலைமலை என்று கூறப்படுகிறது. இங்குள்ள இராமர் சுனையானது சீதாதேவியின் தாகத்தை தீர்க்க இராமர் தன் அம்பால் உண்டாக்கிய சுனை என்று பக்தர்கள் நம்புகின்றனர். இங்கு வரும் பக்தர்கள் தங்களது வேண்டுகோள் நிறைவேறிவிட்டால் 3 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள அரையடி திட்டில் கிரிவலம் வந்து நன்றி கடன் செலுத்துவது வழக்கம். இதில் சிறிது கால் தவரினால் உயிருக்கு ஆபத்து. ஆரம்பத்தில் பெண்கள் தங்களது காணிக்கையை செலுத்துவதற்க்கு குழந்தைகளை தன்முதுகில் கட்டிக்கொண்டு வந்தது பின்னர் தடைசெய்யப்பட்டது. இங்குள்ள கன்னிமார் திருக்குளம் வருடம் முழுவதும் வற்றாத நீர் நிலையாகும். சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நாயக்கர் மன்னர் கனவில் தோன்றி தனக்கு கோவில் கட்ட பெருமாள் கூறியதால் இக்கோவில் நாயக்கரால் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இன்றளவும் நாயக்கர் வம்சத்தினரே கோவிலை பராமரிப்பில் வைத்துள்ளனர்.

கருத்துகள்

alakiras இவ்வாறு கூறியுள்ளார்…
Nalla eluthureenga, keep it up. Write more.

பிரபலமான இடுகைகள்